அரை நிர்வாணமாக இருக்கும் வாக்னர் குழு தலைவர் - மோசமான நிலைமையில் தள்ளிய புதின்!
ரஷ்ய கூலிப்படையான வாக்னர் குழுவின் தலைவரின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
வாக்னர் குழு
கடந்த ஒன்றரை வருடமாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தி வருகிறது, இதனை தடுக்க பல நாடுகள் முயன்றபோதும் இந்த போர் நீடித்து கொண்டே வருகிறது. அச்சமயத்தில் ரஷிய படைகளுடன் இணைந்து தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்தது.
உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றுவதில் இந்த குழு முக்கிய பங்குவகித்தது. சமீபத்தில் இந்த குழு ரஷிய நாட்டிற்கு எதிராக திடீர் புரட்சியில் ஈடுபட்டது. பின்னர் அந்த கூலிப்படையுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததால் ஓரிரு நாட்களிலேயே இந்த புரட்சி முடிவுக்கு வந்தது. மேலும், அந்த குழு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கூறினர்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில், அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் கொலை செய்யப்படலாம் அல்லது நிரந்தரமாகச் சிறை வைக்கப்படலாம் எனக் கூறியிருந்தனர். அதிபர் பைடன் கூட ப்ரிகோஜின் உணவில் பாய்சன் கலக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தார்.
அவரது புதிய போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதில் அவர் டென்ட் ஒன்றில் சிறிய படுக்கையில் அரைநிர்வாணமாக வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கேமராவை பார்த்து கை அசைக்கிறார். இந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.