கடைசி நேர மாற்றம் - பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்!! கம்பீரை ஒதுக்கும் காரணம்?
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தான் நியமிக்கப்படுவார் என்ற தகவல் உள்ளது.
தலைமை பயிற்சியாளர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது டிராவிட் பதவி வகித்து வருகிறார். நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 தொடருடன் அவரின் தலைமை பதிவு பொறுப்பு காலம் முடிவடைகிறது. அவருக்கு அடுத்ததாக யார் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்தன
முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் கம்பீரின் பெயரே அடிபட்ட நிலையில், கிட்டத்தட்ட அவர் உறுதிப்படுத்தப்பட்டு விட்டார்.அதற்கான நேர்காணலிலும் அவர் பங்கேற்றார். அவரை தவிர வேறு யாரும் வரவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் WV ராமன் பங்கேற்றார் என்ற தகவலும் உள்ளது.
உள்ளே வந்த விவிஎஸ்
நேர்காணலில் பங்கெடுத்த கம்பீர் அடுக்கடுக்கான பல கண்டிஷன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்திய ஏ, பி, சி என்ற அணிகள் வேண்டும், மூத்த வீரர்கள் டி20 தொடர்களில் பெரிய அணிக்கு எதிராக மட்டுமே இடம் பெறணும் என்றெல்லாம் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது மற்றுமொரு செய்தி வெளிவந்துள்ளது. அதாவது டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு இந்திய ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் தொடரில் விளையாடவுள்ளது.
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கவேண்டும் என கம்பீர் கூறும் நிலையில், தான் ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களே பங்கேற்பார்கள் என்றும் அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் இருப்பார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.