தலைமை பயிற்சியாளராகும் கம்பீர்...இத்தோட போதும் என விலகும் விவிஎஸ் லக்ஷ்மண்?

Indian Cricket Team Board of Control for Cricket in India Gautam Gambhir
By Karthick Jun 27, 2024 05:49 AM GMT
Report

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் தேர்வு குறித்த பேச்சுக்கள் இன்னும் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றன.

தலைமை பயிற்சியாளர்

ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவரின் பதவி காலம் முடிவடையும் நிலையில், அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற பேச்சுக்கள் எழுந்தன.

Gautam Gambhir

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை கோப்பைக்கு அழைத்து சென்ற அணியின் மேண்டர் கவுதம் கம்பீர் பெயர் அதிகளவில் அடிபட்டது. நடைபெற்ற நேர்கணிலும் அவர் பங்கேற்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டார்.

ஒன்னுமே பண்ணல...யோசிக்கவேண்டாம் - ஜடேஜா மாற்றணும்!! போர்க்கொடி தூக்கிய நட்சத்திர வீரர்?

ஒன்னுமே பண்ணல...யோசிக்கவேண்டாம் - ஜடேஜா மாற்றணும்!! போர்க்கொடி தூக்கிய நட்சத்திர வீரர்?

அதே நேரத்தில், இடையில் நடைபெற்றவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண்  நியமிக்கப்பட்டுள்ளார். கம்பீர் அணிக்கு தலைமை ஏற்கும் நிலையில், பலதரப்பட்ட மாற்றங்கள் அணியில் மாற்றப்படும் என கூறப்படுகிறது.

விலகும் விவிஎஸ் லக்ஷ்மண் 

அதனை தொடர்ந்து தான், தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவராக இருக்கும் விவிஎஸ் லட்சுமண் இந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.

Gautam Gambhir VVS Lakshman

2021 ஆம் ஆண்டு டிசம்பரில் விவிஎஸ் லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்றார் அவர் இந்தியா U-19, இந்தியா A அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டுளளர் என்பது குறிப்பிடத்தக்கது.