ஒன்னுமே பண்ணல...யோசிக்கவேண்டாம் - ஜடேஜா மாற்றணும்!! போர்க்கொடி தூக்கிய நட்சத்திர வீரர்?

Ravindra Jadeja Sunil Gavaskar Indian Cricket Team 2024 T20 World Cup Cricket Tournament
By Karthick Jun 26, 2024 06:53 AM GMT
Report

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா உலகக்கோப்பையை சிறப்பான ஒரு பங்களிப்பை இன்னும் கொடுக்கவில்லை.

ஜடேஜா

இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் டி20 தொடரில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார் ஜடேஜா. உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர்களில் அவரும் ஒருவர்.

Ravindra Jadeja World Cup T20 2024

மிடில் ஆர்டரில் ஜடேஜா போன்ற ஒருவரின் அனுபவமும், அவரின் சுழற்பந்துவீச்சும் அணிக்கு தேவை என தேர்வின் போது பலரும் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

Ravindra Jadeja World Cup T20 2024

தற்போது வரை இந்திய அணி 6 போட்டிகளில் விளையாடிவிட்டது. 6'லும் வெற்றி தான். ஆனால், அவற்றில் ஒன்றில் கூட ஜடேஜா தனது பங்களிப்பை பெரிதாக தரவில்லை. அனைத்து போட்டிகளிலும் சேர்த்து வெறும் 1 விக்கெட் மட்டுமே அவர், எடுத்திருக்கும் நிலையில் மொத்தமாக வெறும் 16 ரன்னை மட்டுமே எடுத்துள்ளார்.

யோசிக்கவேண்டும்

இதன் காரணமாக, கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறார் ஜடேஜா. அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் மற்றுமொரு பேட்ஸ்மேனை சேர்க்க வேண்டும் என கருத்துக்களும் வெளிப்பட துவங்கிவிட்டன

தண்ணி கேன் போட வந்தீங்களா? தொடர்ந்து ஏமாற்றும் விராட் - வேதனையில் ரசிகர்கள்

தண்ணி கேன் போட வந்தீங்களா? தொடர்ந்து ஏமாற்றும் விராட் - வேதனையில் ரசிகர்கள்

ஜடேஜா குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசும் போது, ஆல் ரவுண்டராக ஜடேஜாவின் ஃபார்மில் சந்தேகம் இல்லை. அவரிடம் நல்ல அனுபவம் உள்ளது.

Ravindra Jadeja World Cup T20 2024

சிறு வாய்ப்பையும் கட்சிதமாக கையாண்டுள்ளார். இவற்றை தாண்டி, ஃபீல்டிங்கில் 20, 30 ரன்களை ஜடேஜா எளிதாக தடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது, ஜடேஜாவை மாற்றுவது குறித்த கேள்வி பற்ற யோசிக்க தேவையில்லை.