தண்ணி கேன் போட வந்தீங்களா? தொடர்ந்து ஏமாற்றும் விராட் - வேதனையில் ரசிகர்கள்
இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் விராட் கோலி பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை.
விராட் கோலி
இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி, உலகக்கோப்பை டி20 தொடரில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதுவரை இந்தியா அணி 6 போட்டிகளில் விளையாடி விட்டது.
அதில், ஒன்றில் கூட விராட் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை. அயர்லாந்து 1(5), பாகிஸ்தான் 4(5), அமெரிக்கா 0(1), ஆப்கனிஸ்தான் 24(24), வங்காளதேசம் 37(28) ரன்களை எடுத்தார்.
இடையில் வங்காளதேசத்திற்கு எதிராக மட்டும் சற்று ஆறுதல் தரும் படி விளையாடியவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 0(5) அவுட்டாகினார். விராட் ஏமாற்றத்துடன் வெளியேறியது போலவே, ரசிகர்களும் புரியாமல் தவிக்கிறார்கள்.
விராட் அபாரமாக ஆடுவது அணிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ரசிகர்களுக்கும் அவர் பௌலர்களை நாலா பக்கமும் விளாசுவதையே காண விரும்புவார்கள்.
ஆனால், அது தற்போதும் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.
Please Comeback King Kohli.