விராட் கோலியை வம்பிழுத்த பந்துவீச்சாளர் - மைதானத்திலேயே ஆக்ரோஷமாக சீறிய ரோகித்!
வங்காளதேசத்திற்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வெற்றி
டாஸ் வென்ற வங்காளதேசம் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. களமிறங்கிய இந்தியாவின் ஓப்பனர்களான ரோகித் 23(11), விராட் 37(28) ரன்களை எடுத்து வெளியேறினர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 36(24) ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், சூர்யகுமார் யாதவ் 6 ரன்களில் ஏமாற்றினார்.
பின்னர் வந்த ஹர்டிக் பாண்டியா - துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்டிக் பாண்டியா 50(27), துபே 34(24) ரன்களை சேர்க்க இந்திய அணி 20 ஓவர்களில் 196/5 ரன்களை எடுத்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் அணியினர், சீரான இடைவேளையில் விக்கெட் பறிகொடுத்தனர்.
லிட்டன் தாஸ் 13(10), தனஜித் ஹாசன் 29(31), நஜமுல் ஹுசைன் 40(32) ரன்களை எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
ரோகித் ஆக்ரோஷம்
இறுதியில் அந்த அணியால் 20 ஓவர்களில் 146/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் 37 ரன்களை எடுத்த போது அவுட்டாகி வெளியேறினார்.
விராட் கோலியின் அவுட்டை தன்சிம் ஹாசன் ஆக்ரோஷமாக மைதானத்தில் கொண்டாடினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வங்கதேசத்தின் ஓப்பனர் லிட்டன் தாஸ் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை கைப்பற்றினார்.
The Rohit Sharma ? celebration ?#rohitsharma #t20cw24 #IndvsBan #INDvsBAN #indvsban #cricketlovers#IndianCricketTeam pic.twitter.com/wwZSOnnSaA
— Devoteeofsharma45 (@devoteofrohit45) June 22, 2024
அப்போது ரோகித் சர்மா விராட் கோலியின் வங்காளதேசத்தினர் எப்படி கொண்டாடினார்களோ அதே போல கொண்டாடி தீர்த்தார். ரசிகர்கள் இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.