கழுகுகள் குறைவு; அதனால் அதிகரிக்கும் மனித உயிரிழப்பு - என்ன காரணம்?

Virus Death World
By Sumathi Dec 04, 2024 07:45 AM GMT
Report

கழுகுகளின் எண்ணிக்கை குறைவு குறித்த அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

கழுகுகள் எண்ணிக்கை

உலகம் முழுவதும் ஏராளமான கழுகுகள் இருந்தாலும் அவற்றின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதிகபட்சமாக கழுகுகளில் 23 இனங்கள் உள்ளன.

கழுகுகள் குறைவு; அதனால் அதிகரிக்கும் மனித உயிரிழப்பு - என்ன காரணம்? | Vultures Dead Lead To Human Death Report Details

இவற்றில் 16 வகைகள் ஆசியாவை சேர்ந்தவை. ஆய்வின்படி உலகம் முழுவதும் சுமார் 5 கோடி கழுகுகள் இருந்தது. சில ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இதனால் கழுகுகள் வேட்டையாடக் கூடியதும், மனிதர்கள் மத்தியில் பாக்டீரியா மற்றும் தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கண்களில் வழியும் ரத்தம்; பரவும் ப்ளீடிங் ஐ வைரஸ் - பகீர் கிளப்பும் பாதிப்பு!

கண்களில் வழியும் ரத்தம்; பரவும் ப்ளீடிங் ஐ வைரஸ் - பகீர் கிளப்பும் பாதிப்பு!

 ஆய்வு அறிக்கை

எனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்கன் எக்கனாமிக் அசோசியேஷன் என்ற பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது. ஏனென்றால், தொற்று நோய்க்கு வழி வகுக்கும் எலி, சில பறவைகள் மற்றும் மனித உயிர்களை கொல்லக்கூடிய பாம்புகள் உள்ளிட்டவற்றை கழுகுகள் வேட்டையாடுகின்றன.

கழுகுகள் குறைவு; அதனால் அதிகரிக்கும் மனித உயிரிழப்பு - என்ன காரணம்? | Vultures Dead Lead To Human Death Report Details

தற்போது கழுகினுடைய எண்ணிக்கை குறைவது, தொற்று நோய் அதிகரித்து மக்கள் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகிறது. மேலும், 5 ஆண்டுகளில் கழுகுகள் எண்ணிக்கை குறைவால் 69 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.