இது என்ன அரசு பள்ளியா? இல்ல ஆபாச பள்ளியா..முகம் சுழிக்க வைக்கும் நடன நிகழ்ச்சி!
பள்ளியில் அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் நடனமாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி
சஹார்சா மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியின் வளாகத்தில், அரைகுறை ஆடையில் பாரில் நடனமாடும் 4 அழகிகளுடன், சிலர் மது அருந்தி விட்டு ஆபாச நடனம் ஆடியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ வைரலானதை பார்த்த மாணவர்களின் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அங்குள்ள ஒரு நபரின் திருமணத்தை முன்னிட்டு இந்த ஆபாச மற்றும் மது விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நடன நிகழ்ச்சி
மேலும், வீடியோவை பார்த்த பலர் பள்ளிகளில் இதுபோன்ற ஆபாச நிகழ்ச்சிகளுக்கு யார் அனுமதி கொடுத்தது? என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர். அதற்கு போலீஸ் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிகழ்ச்சிக்கு போலீசார் எந்த அனுமதியும் அளிக்கவில்லை என்றும், இந்த வீடியோ வெளியான பிறகு இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது பற்றி தெரிய வந்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருதாகவும் தெரிவித்துள்ளனர்.