ஒரு வாக்காளர் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம் - இலங்கை தேர்தலின் நடைமுறை!
இலங்கை தேர்தலில் ஒரு வாக்காளர் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இலங்கை தேர்தல்
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. ராஜபக்சே கட்சி வெற்றி பெற்று திபராக கோத்தபய ராஜபக்சே பதவி வகித்து வந்தார்.
தொடர்ந்து வன்முறை, போராட்டத்தை அடுத்து இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார். பின், ரனில் சிங்க விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
வித்தியாச நடைமுறை
தற்போது பதவிக்காலம் முடிவடைய இருப்பதனால், இன்று வாக்கு பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 38 வேட்பாளர்கள் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.
தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரமதேசா போட்டியிடுகிறார். என்பிபி எனும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் அனுரகுமார திஸாநாயக்காவும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலை பொறுத்தவரை வாக்குப்பதிவில் புதிய நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஒரு வாக்காளர் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.