பெண்களுக்கு 6 நாள்கள் விடுமுறை...அதுவும் சம்பளத்துடன் - அரசின் சூப்பர் முடிவு!

Karnataka India
By Swetha Sep 21, 2024 05:55 AM GMT
Report

பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கும் சட்டத்தை கர்நாடக அரசு இயற்ற உள்ளது.

விடுமுறை 

மாதவிடாய் காலங்களில் பெண்கள் மாதவிடாய் வலி மற்றும் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவதால் அந்த நாட்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு 6 நாள்கள் விடுமுறை...அதுவும் சம்பளத்துடன் - அரசின் சூப்பர் முடிவு! | Karnataka Govt Is To Give Menstrual Leave With Pay

இந்த நிலையில், பெண்களுக்கு மாதவிலக்கு நாள்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பளத்துடன் விடுமுறை வழங்கும் சட்டத்தை கர்நாடாக அரசு கொண்டு வர உள்ளதாக அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய அவர், , “பெண்கள் நலம் சார்ந்து கர்நாடக அரசு புதிய கொள்கையை வகுத்துள்ளது. இதற்காக 18 பேர் குழு தனது அறிக்கையை வழங்கியுள்ளது.

இதில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை (ஆண்டு ஒன்றுக்கு) வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இதனை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை; தனியார் நிறுவனங்களுக்கும் அமலுக்கு வரும் சட்டம்

ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை; தனியார் நிறுவனங்களுக்கும் அமலுக்கு வரும் சட்டம்

 அரசின் முடிவு

பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குறிப்பிடத்தக்க உடல் மற்றும் உணர்ச்சி ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்வதால், பெண் பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

பெண்களுக்கு 6 நாள்கள் விடுமுறை...அதுவும் சம்பளத்துடன் - அரசின் சூப்பர் முடிவு! | Karnataka Govt Is To Give Menstrual Leave With Pay

இந்த விடுப்பு நெகிழ்வுத் தன்மை உடையாதாக இருக்கும், இதனால் பெண்கள் தங்களுக்கு நேரம் தேவைப்படும்போது விடுப்பை தேர்வு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக பொதுமக்கள்,

தொழில் நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு அதன் அடிப்படையில் சட்டம் கொண்டு வரப்படும் என்றார். இது அமல்படுத்தப்பட்டால், பீகார், கேரளா, ஒடிசாவுக்கு அடுத்தபடியாக

பெண்களுக்கு ‘மாதவிலக்கு விடுமுறை’ வழங்கும் நான்காவது மாநிலமாக கர்நாடகா உருவாகும். கேரளாவில் பெண் ஊழியர்கள் மட்டுமின்றி 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.