கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட 2500 பேர் - பின்னணி என்ன!

Skin Cancer Australia Viral Photos
By Sumathi Nov 29, 2022 06:21 AM GMT
Report

ஆஸ்திரேலிய கடற்கரையில் 2,500 பேர் நிர்வாணமாக திரண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விழிப்புணர்வு

உலக அளவில் தோல் புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் கூறுகிறது.

கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட 2500 பேர் - பின்னணி என்ன! | Volunteers Nude Photoshoot Australian Beach

இந்நிலையில், அங்கு கடந்த ஒருவாரமாக தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், மக்கள் வழக்கமான தோல் பரிசோதனைகளை செய்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அந்த நாட்டின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தோல் புற்றுநோய்

இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். சூரிய உதயத்தின்போது கடற்கரை முன்பு நிர்வாணமாக நின்று தோலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் டுனிக் இந்த புகைப்படத்தினை எடுத்ததற்காக பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.