ஜூம் மீட்டிங்கில் அரை நிர்வாணமாக படுத்து புகைபிடித்த நீதிபதி... - 3 மாதம் பணியிடை நீக்கம்..!
கொலம்பிய நீதிபதி ஒருவர் ஜூம் மீட்டிங்கில் புகைபிடித்து அரை நிர்வாணமாக படுக்கையில் படுத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூம் மீட்டிங்கில் புகைபிடித்த நீதிபதி
கொலம்பியாவைச் சேர்ந்தவர் நீதிபதி விவியன். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அரை நிர்வாணமாக போட்டோக்களை வெளியிட்டு பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.
இவர் இன்ஸ்டாவில் அரைநிர்வாண படங்களைப் பகிர்ந்ததற்காக எச்சரிக்கைகளை பெற்றிருக்கிறார்.
இது குறித்து பேசிய நீதிபதி விவியன், எல்லா நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற மாநில ஊழியர்கள் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. நான் என்ன அணிவது மற்றும் எனது சமூக ஊடகங்களில் காண்பிப்பது எனது முடிவு, நான் எதையும் மாற்றப் போவதில்லை என்று பேசினார்.
இந்நிலையில், மெய்நிகர் விசாரணையின் போது ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவர் நீதிபதி விலியன் குறித்து புகார் ஒன்றை தெரிவித்தார்.
அந்த புகாரில், நீதிபதி விலியன் ஜூம் மீட்டிங்கில் புகைபிடித்து அரை நிர்வாணமாக படுத்திருந்ததாக தெரிவித்தார். வழக்கறிஞர் கூறிய புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டதால், விலியன் 3 மாதம் இடையிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நீதிபதி விவியன் ஒரு மெய்நிகர் விசாரணையின் போது உள்ளாடையுடன் தனது படுக்கையில் புகைபிடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
