எரிமலைகளால் மூடப்பட்ட வீனஸ் - கண்டுபிடிப்பில் விலகும் நீண்டகால மர்மம்!
வீனஸில் எரிமலை செயல்பாட்டின் அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளனர்.
வீனஸ்
வீனஸ் பூமிக்கு நெருங்கிய அண்டை கிரகம் என்பதால், பூமி வாழக்கூடியதாக இருக்கும்போது அதன் நிலப்பரப்பு ஏன் நரகமாக இருக்கிறது என்பது தீராத கேள்வியாகவே உள்ளது. இந்நிலையில், வீனஸில் எரிமலை செயல்பாடு உள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் அவற்றில் எதுவும் இன்னும் செயலில் உள்ளதா இல்லையா என்பது நீண்ட காலமாக ஆய்விலேயே உள்ளது. 1990 மற்றும் 1992 க்கு இடையில் நாசாவின் மாகெல்லன் விண்கலத்தால் சேகரிக்கப்பட்ட கிரகத்தின் மேற்பரப்பின் ரேடார் படங்களை ஆய்வு செய்வதன் மூலம் அவற்றில் குறைந்தபட்சம் ஒன்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எரிமலை வென்ட்
மேலும், வீனஸின் அட்லா ரெஜியோ பகுதியில் ஒரு எரிமலை வென்ட் உள்ளது. அதில் இரண்டு எரிமலைகள் உள்ளது. கிரகத்தின் மிகப்பெரிய எரிமலைகள், எட்டு மாத இடைவெளியில் எடுக்கப்பட்ட இரண்டு படங்களுக்கிடையில் வடிவம் மாறியிருப்பது கண்டறியப்பட்டது.
இது காற்றோட்டத்திற்கு அடியில் மாக்மாவின் வெடிப்பு அல்லது ஓட்டத்தை வெளிக்காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.