ஸ்பெயினில் மீண்டும் வெடித்துச் சிதறும் எரிமலை - வீடுகள், வாழைத்தோட்டங்கள் சேதம்
world-viral-news
By Nandhini
ஸ்பெயினில் எரிமலை வெடித்ததில், எரிமலைக் குழும்பு தொடர்ந்து வெளியேறி வந்துக் கொண்டிருக்கிறது.
லா பால்மா தீவில் உள்ள எரிமலை கடந்த 19ம் தேதி வெடித்து சிதறியது. சில நாட்கள் அமைதி காத்த எரிமலை, மீண்டும் லாவா என்னும் எரிமலைக் குழம்பை கொப்பளிக்கத் தொடங்கி இருக்கிறது.
இந்த எரிமலைக் குழம்பு ஆறு போல ஓடி அட்லாண்டிக் கடலை நோக்கிச் சென்றது. லாவா ஓடிய பாதையில் இருந்த 600க்கும் அதிகமான வீடுகள், வாழைத்தோட்டங்கள், வழிப்பாட்டு தலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், முதல்கட்டமாக 10.5 மில்லியன் யுரோவை நிவாரண நிதியாக ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.