இப்போ இருப்பது புதினே இல்லையா... அப்போ யாரு? உளவுத்துறை கூறும் பகீர் தகவல்!

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Sumathi Aug 06, 2022 02:30 PM GMT
Report

புதினை போன்றே தோற்றம் கொண்ட போலி நபர் உலாவி வருவதாக உக்ரைன் நாட்டு உளவுத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

பொருளாதார தடை

5 மாதங்களை கடந்து 6வது மாதமாக உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவி செய்யும் வேளையில் ரஷ்யாவை கடுமையாக எதிர்த்து பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இப்போ இருப்பது புதினே இல்லையா... அப்போ யாரு? உளவுத்துறை கூறும் பகீர் தகவல்! | Vladimir Putin Using A Physical Duplicate

இந்நிலையில், ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவர் புற்றுநோயால் அவதிப்படுவதாக கூறப்பட்டது. பிறநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் போது, புதினின் கை, கால்களில் நடுக்கம் இருந்தன என்று ஊடகங்கள் தெரிவித்தன.

 உளவுத்துறை தகவல்

இதேபோல் புதின், தன்னை போன்று உருவம் கொண்ட நபர் பொது வெளியில் உலாவ விடுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை ரஷியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் புதினை போன்றே தோற்றம் கொண்ட போலி நபர் உலாவி வருவதாக உக்ரைன் நாட்டு உளவுத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இப்போ இருப்பது புதினே இல்லையா... அப்போ யாரு? உளவுத்துறை கூறும் பகீர் தகவல்! | Vladimir Putin Using A Physical Duplicate

உக்ரைனின் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடானோவ் ஒருதொலைக் காட்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, புதினின் சமீபத்திய தோற்றங்களில் அவரது உயரமும், காதுகளும் மாறி உள்ளன. அவரது புகைப் படங்களில் ஒவ்வொன்றிலும் காதுகள் வித்தியாசமானதாக இருக்கிறது.

ரஷிய அதிபர் புதின்

ஒவ்வொரு நபரின் காதும் தனித்துவமானது. அது ஒரு கைரேகை போன்றது. அதை மீண்டும் செய்ய முடியாது. புதினை போன்று வேறு ஒரு நபரை பயன்படுத்தி வருகிறார்கள். சமீப காலங்களில், புதின் பொது வெளியில் தோன்றிய போது வெவ்வேறான பழக்க வழங்கங்கள்,

வித்தியாசமான நடத்தைகள், வித்தியாசமான நடைகள், நன்கு கூர்ந்து கவனித்தால் வெவ்வேறு உயரங்களை நீங்கள் பார்க்கலாம். கடந்த மாதம் ஈரானுக்கு சென்று அந்நாட்டு அதிபர் மற்றும் துருக்கி அதிபரை சந்திக்க புதினின் போலி நபர் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.

அது புதினா? 

நான் ஒரு குறிப்பை மட்டும் கொடுப்பேன். ஈரானின் தெக்ரானில், புதின் விமானத்தில் இருந்து கீழே இறங்குவதை பாருங்கள். அது புதினா? என்பதை பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார். அதே போல் உக்ரைன் வட்டாரங்கள் கூறும்போது,

தெக்ரானில் விமானத்தில் இருந்து கீழே இறங்கியபோது புதின் வழக்கத்துக்கு மாறாக விரைந்து நடந்து சென்றதாக தெரிவித்துள்ளது.