இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து

Vladimir Putin
By Nandhini Jul 23, 2022 12:56 PM GMT
Report

குடியரசு தலைவர் தேர்தல் வெற்றி

கடந்த 18-ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது.இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிட்டார். இந்த தேர்தலில் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகள் பெற்று இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் திரௌபதி முர்முக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து

இந்நிலையில், இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதிக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ‘இந்தியாவின் குடியரசுத் தலைவராக உங்கள் செயல்பாடுகள், ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவையும், நமது நட்பு நாடுகளின் நலனையும் பாதுகாக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.   

Vladimir Putin - Droupadi Murmu