திரௌபதி முர்முவுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்வுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தல் வெற்றி
கடந்த 18-ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது.இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகள் பெற்று இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் திரௌபதி முர்முக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஈ.பி.எஸ் நேரில் வாழ்த்து
அதிமுக இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பின் முதன் முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.