அவர்களை மேலாடை இன்றி பார்த்தாலே அறுவெறுப்பாக இருக்கும்... - தன்னை கிண்டிலத்த தலைவர்களுக்கு புதின் பதிலடி
உக்ரைன் போர்
உக்ரைன் போர் 150 நாட்களை கடந்தும் முடியாத தொடர்கதையாக உள்ளது. உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.
உக்ரைனில் இதுவரை 300க்கும் மேற்பட்ட தேவாலயங்கள், பாரம்பரிய தளங்கள் ரஷிய துருப்புக்களால் அழிக்கப்பட்டுள்ளன என்றும், ரஷ்ய பீரங்கிகள் நாடு முழுவதும் 200 பாரம்பரிய இடங்களையும், 113க்கும் மேற்பட்ட தேவாலயங்களையும் அழித்துள்ளன என்றும், சமீபத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி போர் நிலவரம் குறித்து தெரிவித்திருந்தார்.
உலக தலைவர்கள் கிண்டல்
இந்நிலையில், ஜெர்மனியில் சில தினங்களுக்கு முன் நடந்த ஜி-7 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பைடன், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிருடேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேல் சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் குதிரையில் செல்லும் வீடியோ காட்சியை பார்த்து சில தலைவர்கள் கிண்டலடித்தார்கள். 'புதின் சட்டையின்றி இருப்பது, குதிரை உடம்பு போல் உள்ளது என்று டிருடேவும், 'நாமும் சட்டையை கழற்றி, புதினை விட பலசாலிகள் என்பதை காட்டுவோமா?' என்று போரிஸ் ஜான்சனும் கூறியிருந்தார். இத்தகவல் வைரலாக சமூகவலைத்தளங்களில் வெளியானது.

புதின் பதிலடி
இதனையடுத்து, இது குறித்து நேற்று புதினிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு புதின் பேசுகையில், 'மேற்கு நாட்டு தலைவர்கள் யாரும் உடற்பயிற்சியே செய்வது இல்லை. நல்லா சரக்கடிப்பார்கள். இடுப்புக்கு கீழோ, மேலோ... துணியின்றி இருக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்படிதான் ஏற்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. அவர்களை இந்த கோலத்தில் எப்படி பார்த்தாலும் சகிக்கவே சக்காது. அருவெறுப்பாகதான் இருக்கும் என்று சிரித்தபடி பதிலடி கொடுத்திருக்கிறார்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களா? - நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம் - வெளியான தகவல்