ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றமா? தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார்?

Tamil nadu R. N. Ravi Governor of Tamil Nadu Draupadi Murmu
By Karthikraja Oct 20, 2024 10:00 AM GMT
Report

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்.என்.ரவி

நாகலாந்து மாநில ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

rn ravi

ஆளுநரின் பதவிக்காலம் 5 வருடம் என்ற நிலையில், நாகாலந்தில் 2 ஆண்டுகள், தமிழ்நாட்டில் 3 ஆண்டுகள் என அவரின் பதவிக்காலம் 3 மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது.  

தமிழர்களின் எண்ணங்களில் விஷம் ஏற்றப்பட்டுள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழர்களின் எண்ணங்களில் விஷம் ஏற்றப்பட்டுள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் மாற்றம்

3 மாதங்களுக்கு முன், பதவிக்காலம் முடிந்த 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ உத்தரவிட்டார். 

rn ravi

ஆனால் 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேச மாநிலங்களின் ஆளுநர்கள் பதவியில் உள்ளனர். இந்த மாநிலங்களில் ஆளுநரை மாற்றுவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வி.கே.சிங்

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரான வி.கே.சிங்கை தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ராணுவ தலைமை தளபதியாக பணியாற்றினார். பதவி ஓய்வு பெற்ற பின், பாஜகவில் இணைந்து 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

v k singh

2014 ஆம் முதல் 2024 வரை மத்திய அமைச்சராக பதவி வகித்து வந்தார். மேலும் இவர் தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளுக்கு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி உள்ளார்.