ஜெயலலிதா தான் சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல வேண்டாம் என்றார் - சசிகாலா
ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என கூறியதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விழா
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் சசிகலாவின் ஆதராவாளர்கள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் சசிகலா கலந்துகொண்டு கேக் வெட்டி ஆதரவற்றவர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார். பின்னர் ஆதரவற்றோருக்கு புத்தாடைகள், கேக் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் யார் பக்கமும் இல்லை, அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுகிறேன். நான் இருக்கும் வரை அதிமுக தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள். அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கிவிட்டேன்.
கரும்பு வழங்க வேண்டும்
அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். தனக்கு பின்னால் யார் வந்தால் நன்றாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும்.
சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என ஜெயலலிதா தான் மருத்துவர்களிடம் சொன்னார். பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க அரசு முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார்.