ஜெயலலிதா மரணத்தில் மர்மம்..சசிகலா சுமூக உறவில் இல்லை - அறிக்கையால் பரபரப்பு!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மரணத்தில் மர்மம்
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா, கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
பொய்யான அறிக்கை
ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால்
ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா, ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.