சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத்தின் கொடுமைகளே காரணம் : நீதிமன்றத்தில் பெற்றோர் பதில் மனு

V. J. Chitra
By Irumporai Jul 05, 2022 04:56 AM GMT
Report

சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த கொடுமையின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சித்ரா தற்கொலை

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தார் .

சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத்தின் கொடுமைகளே காரணம் : நீதிமன்றத்தில் பெற்றோர் பதில் மனு | Vjchitra Suicide Case Plea Petition

ஹேம்நாத்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.  

ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்த சித்ராவின் தந்தை காமராஜும் ஹேம்நாத் மனுவில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி காமராஜ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், உயிரிழந்த சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், ஹேம்நாத்தை சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நீதிமன்றத்தில் மனு

மேலும் சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை வீட்டிற்கு ஹேம்நாத் அழைத்து வந்துள்ளதாகதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் தற்கொலை செய்துள்ளதாகவும் காமராஜ் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத்தின் கொடுமைகளே காரணம் : நீதிமன்றத்தில் பெற்றோர் பதில் மனு | Vjchitra Suicide Case Plea Petition

விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகவே தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோருவதாகவும், போதிய ஆதாரங்கள் உள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையை எதிர்கொள்வதே சரியானது எனவும், எனவே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யாமல், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சிக்கும் அதிமுக பிரபலம்... பரபரப்பு தகவல்