நடிகை சித்ரா இறப்பதற்கு முன்பு அறையில் நடந்த சம்பவம்... அதிரவைக்கும் தகவல்

V. J. Chitra
By Petchi Avudaiappan May 03, 2022 09:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகை விஜே சித்ரா இறப்பதற்கு ஹோட்டல் அறையில் நடந்தது என்ன என்பது குறித்து அவரது கணவர் ஹேமந்த் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் சில தினங்களுக்கு முன் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். அதன்படி சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.மேலும் அந்த தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் எனவும் ஹேம்நாத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சித்ரா இறப்பதற்கு முன்பு ஹோட்டல் அறையில் நடந்தது என்ன என்பது குறித்து கணவர் ஹேமந்த் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.  சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு  ஷூட்டிங் முடிந்து 1.30 மணிக்கு சித்ரா ஹோட்டல் அறைக்கு வந்ததாகவும், வந்ததில் இருந்தே அதிர்ச்சி கலந்த ஏதோ ஒரு யோசனையில் ரோட்டையே வெறித்து பார்த்தார் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே சில அரசியல் பிரமுகர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளை கூறிய சித்ரா அன்று இரவும் அறைக்கு வந்த பிறகு அதைப்பற்றி பேசி வருத்தப்பட்டார். அதற்கு ஆறுதலாக தான் பேசியதாகவும், அறைக்கு வெளியில் இருந்த புல்வெளியில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்ததாகவும் ஹேமந்த் கூறியுள்ளார். 

நடிகை சித்ரா இறப்பதற்கு முன்பு அறையில் நடந்த சம்பவம்... அதிரவைக்கும் தகவல் | What Happened In Room Before Chithras Death

அனால் நான் பேசிய எதையுமே சித்ரா காதில் வாங்கவில்லை என்றும், அவரை தொட்டபோது கூட பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சித்ராவை தொந்தரவு செய்ய வேண்டாம் என தான் வெளியே அமர்ந்துவிட்டேன். சித்ரா உள்ளே சென்றதால் குளிக்கப்போகிறார் என்று நினைத்த நிலையில் 5 நிமிடம் கழித்து உள்ளே சென்றபோது கதவு பூட்டியிருந்தது என்றும் சித்ராவின் முனகல் சத்தம் மட்டும் கேட்டது என்றும் கூறியுள்ளார்.

இதனால் அழுகிறார் என்று நினைத்து வரவேற்பு அறையில் மற்றொரு சாவி வாங்க சென்றதாகவும் ஹேமந்த் தெரிவித்துள்ளார். தனக்கு காலில் அடிபட்டு இருந்ததால் ஹோட்டல் ஊழியர்தான் வந்து கதவை திறந்தார் என்றும், அவர்தான் சித்ரா தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்து ஷாக்கானார் என்றும் அவர் கூறியுள்ளார். அப்போது கூட சித்ரா பேய் வேஷம் போட்டு பயமுறுத்துகிறார் என்றும், தூக்கில் தொங்குவது போல் விளையாடுகிறார் என்றே நினைத்ததாகவும் தெரிவித்துள்ள ஹேமந்த் சித்ரா அறைக்கு வந்த அறை மணி நேரத்திற்குள்ளேயே இவையெல்லாம் நடந்து முடிந்துவிட்டது என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 

இந்த தகவலால் மீண்டும் அவரது மரண வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.