வீடியோவில் எல்லை மீறிய விஜே சித்து..நெட்டிசன்கள் கொடுத்த எச்சரிக்கை - நடந்தது என்ன?
பிரபல யூடியூபர் விஜே சித்து வெளியிட்ட வீடியோவால் சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல யூடியூபர்
யூடியூபில் பிராங் ஷோ மூலம் பிரபலமானவர் விஜே சித்து. தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இதில் நண்பர்களுடன் செல்லும் பயணங்கள் குறித்தும், தாங்கள் சென்று உண்ணும் உணவுகள் குறித்து ரிவ்யூ கொடுத்து வருகின்றனர். மேலும் நகைச்சுவை கலந்த பாணியில் சொல்வதால் அனைவரையும் கவர்ந்தது. இவரது சேனலை 40 லட்சத்திற்கும் மேலானவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த கடந்த 7-ஆம் தேதி ஒரு வீடியோ ஒன்றை விஜே சித்து பதிவிட்டிருந்தார். அதில் நண்பனுடைய திருமணத்திற்குச் சென்றனர். அப்போது ‘நிக்கல் - குந்தல் என்ற 90’களின் விளையாட்டை விளையாட முடிவெடுத்தனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நிக்கல் என்று சொல்லிவிட்டுத் தான் எழ வேண்டும்.
சர்ச்சை வீடியோ
அப்படிச் சொல்லவில்லை என்றால் அடி விழும். அதன்படி,விஜே சித்து மற்றும் அவரது நண்பர்கள் மாறிமாறி அடித்துக் கொள்கின்றனர். அப்போது விஜே சித்து சரமாரியாக அடித்ததுடன், அவரை காலால் எட்டி உதைத்தார். இது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் பார்வையாளர்களைக் கோபமடையச் செய்துள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவை என கூறிக் கொண்டு ,விஜே சித்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கமெண்ட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பதறிப்போன விஜே சித்து, அந்த வீடியோவை மட்டும் யூடியூப்வில் இருந்து தற்போது நீக்கியுள்ளார்.