டிடிஎஃப் வாசன் அடுத்து கைதாகும் யூடியூப் பிரபலம் - சிக்கலில் விஜே சித்து?

Tamil nadu Tamil Nadu Police
By Karthick May 31, 2024 04:28 AM GMT
Report

பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசனை தொடர்ந்து மற்றுமொரு பிரபலமான விஜே சித்துவும் கைதாகவுள்ளார் என செய்தி பரவ துவங்கியுள்ளது.

டிடிஎஃப் வாசன் கைது

அதிகவேகமாக பைக் ஓட்டினார் என்ற வழக்கில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கைதான பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசன் மீண்டும் கார் ஓட்டிய வழக்கில் நேற்று கைதாகினர்.

TTF vasan

அவரின் பைக் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது கார் ஓட்டியும் அவர் கைதாகி, அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.

எனக்கு மட்டும் ஜெயில்? கார் ஏத்தி கொன்னவனுக்கு பெயிலா?? ஆதங்கத்தை கொட்டிய TTF வாசன்

எனக்கு மட்டும் ஜெயில்? கார் ஏத்தி கொன்னவனுக்கு பெயிலா?? ஆதங்கத்தை கொட்டிய TTF வாசன்

இது தொடர்பாக பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வெளிவர துவங்கிய நிலையில், தற்போது மற்றுமொரு பிரபல யுடியூபரான விஜே சித்து மீது கவனம் திரும்பியுள்ளது.

சித்துக்கு சிக்கல்

Vj Siddhu என்ற யூடியூப் தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் சித்து. அதே போல அவரின் மொட்டை மாடி என்ற வீடியோக்களும் முக்கிய பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியாகவே மாறியுள்ளது.

VJ siddhu

இந்த விவகாரத்தில் விஜே சித்து சிக்க முக்கிய காரணம், vlog வீடியோ ஒன்றில் சித்து, போன் பேசி கொண்டே கார் ஓட்டுகிறார்.

VJ siddhu arrest

டிடிஎஃப் வாசனும் இதே போன்ற வழக்கில் தான் கைதுசெய்யப்பட்டார் என்பதால், தற்போது சிலர் சமூகவலைத்தளங்களில் சட்டம் அனைவரும் சமம் - அப்படி என்பதால் இவரும் கைது செய்யப்படவேண்டும் அல்லவா? என கேள்விகளை எழுப்பி விட்டுள்ளனர்.