எனக்கு மட்டும் ஜெயில்? கார் ஏத்தி கொன்னவனுக்கு பெயிலா?? ஆதங்கத்தை கொட்டிய TTF வாசன்
மதுரை காவல்துறையினரால் யூடுயூபர் TTF வாசன் இன்று கைது செய்யப்பட்டார்.
TTF வாசன் கைது
காரில் கேமரா வைத்து ஓட்டிக்கொண்டே போனில் பேசியதன் காரணமாக, இன்று பிரபல யுடியூபர் TTF வாசன் மதுரை அண்ணாநகர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மரணத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக 308 சட்டத்தின் பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, TTF வாசன் வேகமாக பைக் ஓட்டிய வழக்கில் கைதாகி வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு மட்டும் ஜெயில்?
விசாரணையை முடித்த பிறகு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட போது, பத்திரிகையாளர்களை கண்ட TTF வாசன் பேசும் போது, சட்டம் எல்லாருக்கும் பொதுவானதுதானே.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டி பேரை கொன்றவருக்கு பெயில். ஆனால் எனக்கு வழக்கா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கு, என்னை பார்த்துதான் எல்லோரும் கெட்டுப் போறாங்களா? நீதிமன்றத்தை மட்டுமெ நம்பியிருக்கிறேன் எனப் பேசிய படியே சென்றார்.
TTF வாசன், அதிவேகமாக சாலையில் பைக் ஓட்டி விபத்துக்குள்ளான வழக்கில், அவருக்கு 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.