ஒரு அன்பிற்காக ஏங்குகிறேன்..ஆனால் - வேதனையுடன் பேசிய பிரியங்கா
பிரியங்கா தேஷ்பாண்டே உருக்கமாக அளித்துள்ள பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரியங்கா தேஷ்பாண்டே
தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாக இருக்கும் பலரும் தற்போது சமூகவலைத்தளங்களிலும் மிகவும் பிரபலமாக இருக்கின்றனர்.அதில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளவர் பிரியங்கா.
தொகுப்பாளினியாகி 15ஆண்டுகள் கடந்துள்ள பிரியங்கா, தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.
அன்புக்காக ஏங்கி...
தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்து பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியது வருமாறு,
தான் தனது வேலையை மிகவும் நேசிப்பதாக தெரிவித்த அவர், காரணம் அது தன்னை ஏமாற்றியதே இல்லை என்று கூறினார்.
தொழிலின் மூலமாக தனக்கு நிறைய மக்களின் அன்பு கிடைத்துள்ளது என கூறினார் பிரியங்கா.
மேலும், தான் ஒரு உண்மையான அன்பிற்காக தற்போதும் ஏங்கி இருப்பதாக கூறிய பிரியங்கா, அப்படி ஒரு அன்பு கிடைத்தால் மட்டும் போதும், மற்ற எல்லாவற்றையும் தானே முழுவதுமாக திருப்பி திருப்பேன் என்று கூறினார்.