விபத்தில் சிக்கி படுத்த படுக்கையான விஜே மணிமேகலை!!

Manimegalai
By Karthick Oct 10, 2023 08:50 AM GMT
Report

பிரபல சின்னத்திரை நடச்சத்திரமான விஜே மணிமேகலை விபத்து ஒன்றில் சிக்கி படுத்த படுக்கையாகியிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜே மணிமேகலை

தொகுப்பாளினியாக அறிமுகமாகி புகழ்பெற்றவர் தான் மணிமேகலை. தனது வெகுளித்தனமான பேச்சாலும், நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்ற இவர், பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்துள்ளார்.

vj-manimegalai-met-with-accident

குடும்பத்தின் எதிர்ப்புகளையும் மீறி டான்ஸ் மாஸ்டரான உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலத்தை பெற்றார்.

இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா டைவர்ஸ் பண்ணியிருப்பேன் - வைரலாகும் மகாலெட்சுமி குறித்த ரவீந்தரின் தகவல்!

இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா டைவர்ஸ் பண்ணியிருப்பேன் - வைரலாகும் மகாலெட்சுமி குறித்த ரவீந்தரின் தகவல்!

தற்போதும் மும்முரமாக சின்னத்திரையில் இயங்கி வரும் இவர், சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கியிருக்கின்றார். இது குறித்து மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.

vj-manimegalai-met-with-accident

காலில் மிகப்பெரிய கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததால் தன்னுடைய காலில் அடிபட்டு விட்டதாகவும் மிக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மணிமேகலைக்கு விரைவில் குணமடைய ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.