2வது திருமணம் குறித்து விஜே மகேஸ்வரி பளீச் - மகனின் தரமான பதிலடி!

Sumathi
in பிரபலங்கள்Report this article
தவறாக கமெண்டுகளுக்கு மகேஸ்வரி மகன் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜே மகேஸ்வரி
தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று பல சின்னத்திரை சேனல்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் விஜே மகேஸ்வரி. சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.
பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகேஸ்வரி மீண்டும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஒரு சில சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ள இவர், விக்ரம், மகான், சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மகன் பதிலடி
விவாகரத்து பெற்று தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய இவர், “எனக்கும் நிறைய தேவைகள் இருக்கிறது. ஆனால் என்னை திருமணம் செய்து கொள்பவர் என் மகனுக்கு சிறந்த அப்பவாக இருப்பரா? என்ற பயம் இருக்கிறது. என்னை திருமணம் செய்துக் கொள்வதாக இரண்டு நபர்கள் கூறியிருக்கின்றனர்.
ஆனால் எனக்குள் ஒரு பயம் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், மகனுடன் இவர் அளித்த பேட்டியில், மகேஸ்வரி குறித்து பல கேள்விகள் மகன் கேசவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், அம்மா பற்றி தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த போது நான் பார்த்து விட்டு மிகவும் வருந்தினேன்.
பின்னர் நாளடைவில் கமெண்ட்டுகளை பார்ப்பதை விட்டு விட்டேன். என்னுடைய பாட்டி ஒரு நாள் பார்த்து விட்டு கூறிய போதும், அவற்றை இனி பார்க்க வேண்டாம் என கூறினேன் எனப் பதிலளித்துள்ளார்.