100 பேர் முன்னாடி மகேஸ்வரியை கிஸ் பண்ணேன்.. அதற்கு அவர் அப்படி பேசினார் - நடிகர் ஓபன் டாக்!
விஜே மகேஸ்வரிக்கு முத்தம் கொடுத்தது பற்றி நடிகர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிக் பாஸ் மகேஸ்வரி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. இவர் அதற்கு முன்னர் விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
சில படங்களிலும் நடித்துள்ளார், பிக் பாஸில் கலந்துகொண்டு இவர் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து பேசினார், அதில் அவரது கணவரை பிரிந்து தனது மகனை கஷ்டப்பட்டு வளர்ப்பதாக கூறினார். இவர் ஒரு போல்ட் லேடி என்ற பேரும் பெற்றார். அதன்பிறகு விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகர் வெளிப்படை
இந்நிலையில், இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் நடிகர் மஹத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காதல் கண்டிசன்ஸ் அப்ளை. இதில் நடிகர் மஹத், சானா கான், நிதின் சத்யா, திவ்ய தர்ஷினி, பிக்பாஸ் அபிஷேக், பிக்பாஸ் மகேஸ்வரி, விவேக் பிரசன்னா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இவர்கள் ஒரு சேனலுக்கு கொடுத்த இன்டர்வியூவில் பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் " ஒரு 100 பேர் முன்னாடி முத்த காட்சி இருந்தது, முதலில் நான் தயங்கினேன், மகேஸ்வரி போல்டாக வந்து இது வெறும் நடிப்பு தானே. லெட்ஸ் டூ இட் என்று கூறினார், அதனப்பிறகு முத்தம் கொடுத்தேன்" என்று கூறியுள்ளார்.