மகன் குறித்து மோசமான விமர்சனம் - சொன்னதை செய்த மகேஸ்வரி!
தன்னை பற்றியும் தனது மகனைப் பற்றியும் அவதூறாக பதிவிட்டவர்கள் மீது மகேஸ்வரி புகாரளித்துள்ளார்.
மகேஸ்வரி
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் விஜே மகேஸ்வரி. இவருக்கும் அசிமுக்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பலமுறை சண்டை வந்துள்ளது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய பின்னர் விருந்தினராக மீண்டும் விஜே மகேஸ்வரி சென்றபோது கூட அசீம் உடன் சண்டை போட்டார்.
இதனால் அசீம் ரசிகர்கள் அவரை தரக்குறைவாக விமர்சனம் செய்தனர். மேலும், அவரது குறித்தும் அவதூறாக கருத்துக்கள் பதிவான நிலையில் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
புகார்
’நச்சு நிறைந்த ஆண்கள் உள்ள இந்த உலகத்தில் ஒரு போராளியாக என் மகன் இருப்பதற்கு நன்றி, இந்த உலகை பெண்களுக்கான சிறந்த உலகமாக மாற்றப் போகிறார் என்று நான் நம்புகிறேன், அதற்காக நான் பெருமை கொள்கிறேன், அம்மா உன்னுடைய பாதுகாப்புக்காக இருப்பேன் என்றும் மகனுக்காக பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் கூறியபடி அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்துள்ளார்