கணவனுக்காக அம்மாவை தெருவுல விடமுடியாது... விஜே மகேஸ்வரி உருக்கம்!

Only Kollywood Gossip Today Vj Maheswari
1 வாரம் முன்

கணவனுக்காக என் அம்மாவை தெருவில் விடமுடியாது என முதல் திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார் விஜே மகேஸ்வரி.

விஜே மகேஸ்வரி

தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று பல சின்னத்திரை சேனல்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் விஜே மகேஸ்வரி. சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.

கணவனுக்காக அம்மாவை தெருவுல விடமுடியாது... விஜே மகேஸ்வரி உருக்கம்! | Vj Maheswari Explains Abour Her Divorce

பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகேஸ்வரி மீண்டும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஒரு சில சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திருமண வாழ்க்கை

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது மகேஸ்வரி விக்ரம், மகான், சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ரைட்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

கணவனுக்காக அம்மாவை தெருவுல விடமுடியாது... விஜே மகேஸ்வரி உருக்கம்! | Vj Maheswari Explains Abour Her Divorce

இந்த நிலையில், விவாகரத்து பெற்று ஒரு குழந்தையுடன் வாழ்ந்துவரும் மகேஸ்வரி ஒரு பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

அனுபவம் 

”நான் என் பணியை சன் மியூஸிக்கில் தான் ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நான் லூசு மாதிரி இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். 16 வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன். எதுக்கெடுத்தாலும் சிரிச்சிக்கிட்டே இருப்பேன். நான் லைவ் ஷோ செய்யும்போது நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன்.

பொட்டு வைக்காததற்குக் கூட திட்டு வாங்கியிருக்கிறேன். சிரிப்பை கம்மி பண்ணுங்க என்று சொல்வார்கள். ஆனால் இப்போ மீடியா எனக்கு ரொம்ப சொல்லிக் கொடுத்திருக்கு. வாழ்க்கையும் தான். நான் என்றைக்குமே நான் ஒரு செலிப்ரிட்டி என்று நினைத்ததே இல்லை.

 பயம் இருக்கிறது

அப்பா எங்களை விட்டுப் பிரிந்த பின்னர் எனக்கு வாழ்வாதாரமாகத் தான் இந்த வேலை இருந்தது. சாப்பிடணுமே என்பதற்காகத் தான் நான் வேலைக்குச் சென்றேன். என்னுடைய முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து வரை சென்றது. பிறகு நான் இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை.

எனக்கு யார் மேலேயும் நம்பிக்கை வர மாட்டேங்குது, என்னுடைய பையன், என்னுடைய அம்மா, என்னுடைய வேலை இதில் மட்டும்தான் நான் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன்.என்னை புரிந்து கொண்டு, என்னுடைய பையனையும் ஏத்துக்கிற மாதிரி ஒரு துணையை என்னால தேர்ந்தெடுக்க முடியவில்லை.

இதனால் இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்ற பயம் எனக்குள் இருக்கிறது. என் அம்மாவைப் போலவே நானும் சிங்கிள் மதராக இருக்கிறேன்” என்று உருக்கமாக பேசியுள்ளார் மகேஸ்வரி.   

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.