கிளாமர் ஃபோட்டோஷூட் பண்ண காரணமே இதுதான் - விஜே மகேஷ்வரி ஓபன்டாக்!
ஃபோட்டோஷூட் குறித்து விஜே மகேஷ்வரி மனம் திறந்துள்ளார்.
விஜே மகேஷ்வரி
தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று பல சின்னத்திரை சேனல்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் விஜே மகேஸ்வரி. சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.
பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகேஸ்வரி மீண்டும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஒரு சில சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கிளாமர் புகைப்படங்கள்
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்தது. விக்ரம், மகான், சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், விவாகரத்து பெற்று மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதில் அவரது கிளாமர் புகைப்படங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள மகேஷ்வரி, எனக்கு சிறுவயதில் இருந்தே அழகான ஆடை அணிவதில் மிகவும் விருப்பம்.
நயன்தாராவை ரொம்ப பிடிக்கும். அவங்களை மாதிரி நாமும் அழகா இருக்கவேண்டும் என ஒரு எண்ணம். ஒரு காலகட்டத்திற்கு மேல், எனது மகனை நான் நன்றாக பார்த்துக்கொள்கிறேன். அவனை சரியான முறையில் வழிநடத்துகிறேன். எனவே இது என் வாழ்க்கை வாழபோகும் கால கட்டத்தில் எனக்கு பிடித்ததை செய்யவே விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.