விஜய் டிவி நடிகரை கரம் பிடிக்கும் அர்ச்சனா! அவரே கொடுத்த ஹிண்ட்..தீயாக பரவும் போட்டோ
கடைசியாக நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் நடிகை அர்ச்சனா.
அர்ச்சனா
பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வெற்றி பெற்றவர் அர்ச்சனா. இந்த நிகழ்ச்சிக்கு முன்பு, விஜே'வாக, நடிகையாக இருந்த அர்ச்சனா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார், ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற அர்ச்சனா, வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற அர்ச்சனாவிற்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் டிராபி, ரூ.50 லட்சத்துக்கான காசோலை, ஒரு கார் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியால் பெரும் பிரபலமடைந்த அர்ச்சனா, எப்போது படங்களில் தோன்றுவார் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால், அவர் தரப்பில் இருந்து தற்போது வரை எந்தவித தகவலும் படவாய்ப்புகள் குறித்து வெளியிடப்படவில்லை.
புகைப்படம்
இச்சூழலில் தான், தற்போது அர்ச்சனாவின் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இன்னொரு நபரோடு நிற்பது போன்ற நிழல் மட்டும் காட்டி "நியூ ப்ராஜெக்ட்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் அப்படத்தில் அர்ச்சனா பக்கத்தில் நிற்கும் நபர் பாரதிகண்ணம்மா சீரியல் நடித்த அருண் என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதே போல, வெளிஊரில் தன்னுடன் பெண் ஒருவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நிலையில், அது அர்ச்சனா தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்ய துவங்கிவிட்டனர்.
முன்னரே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பெரிதாக கூறப்பட்ட நிலையில், அதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
