பொது இடத்திலேயே எல்லை மீறிய அஜித் பட தயாரிப்பாளர்...முகம் சுளித்த பிரியாமணி..?
ஹிந்தியில் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மைதான் படத்தில் நடித்துள்ளார் பிரியாமணி.
பிரியாமணி
தமிழ், தெலுங்கு படங்களை தாண்டி ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகின்றார் பிரியாமணி. ஷாருக் கானுடன் அவர் நடித்த "ஜவான்" படம் மாபெரும் வெற்றியை பெற்று 1000 கோடி வரை வசூலை குவித்தது.
ரம்ஜானை முன்னிட்டு தற்போது வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள "மைதான்" என்ற படத்திலும் பிரியாமணி பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படம், இந்திய ஹாக்கி அணியை மையமாக கொண்டு உருவாகியிருக்கின்றது. படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகாத முறையில்..
இப்படத்தின் பிரஸ் ஷோவில் கலந்து கொள்ள வந்த பிரியாமணியிடம் தயாரிப்பாளர் போனி கபூர் தகாத முறையில் நடந்து கொண்டதாக ரசிகர்கள் குறைகூறி வருகிறார்கள்.
அப்போது பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுக்கும்போது போனி கபூர் ப்ரியாமணியை தகாத முறையில் தொட்டார் என்று நெட்டிசன்கள் கிழித்து எடுத்துவருகின்றனர்.
மேலும் அவர் அப்படி தொட்டதை ப்ரியாமணி கொஞ்சமும் ரசிக்கவில்லை என்பது வீடியோவில் உறுதியாவதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.