விவேக் மரணத்திற்கு இப்போது வரை காரணம் தெரியவில்லை - பகீர் கிளப்பிய மனைவி
விவேக் மனைவி அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
நடிகர் விவேக்
காமெடியில் பகுத்தறிவு சிந்தனையையும், முற்போக்கு சிந்தனையையும் அதிகம் இருக்கும்படி ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகர் விவேக். கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட மறுநாள் உயிரிழந்தார்.
எனவே விவேக்கின் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்று பெரும் சர்ச்சையே வெடித்தது. இந்நிலையில் அவர் மனைவி அளித்துள்ள பேட்டி ஒன்றில், "கொரோனா சமயத்தில் மக்கள் குழப்பமான மனநிலையில் இருந்தார்கள்.
புதிது புதிதாக தடுப்பூசி வருகிறதே அதை போடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். விவேக்குக்கும் அந்தக் குழப்பம் இருக்கத்தான் செய்தது. அவரும் நிறைய பேரிடம் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை செய்தார்.
மனைவி பேட்டி
அந்த சமயத்தில் அவர் வெளியூருக்கு ஷூட்டிங் செல்லக்கூடிய நிலைமை இருந்தது. எனவே விமானத்தில் செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி போட வேண்டும் என்கிற விதி இருந்தது. எனவே தடுப்பூசி போட இரண்டு முறை சென்றும் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
அதற்கு பிறகு மூன்றாவது முறையாகத்தான் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அப்போது ஊடகத்தினரை அழைத்து அவர்கள் முன்னர்தான் போட்டுக்கொண்டார். தான் போட்டுக்கொண்டால் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என்பதால்தான் அவர் அப்படி செய்தார். ஆனால் அடுத்த நாள் அவர் உயிரிழந்துவிட்டார்.
அவர் இறந்ததற்கான காரணம் என்னவென்று எனக்கு இப்போதுவரை தெரியவில்லை. அவர் இறந்ததை அடுத்து பலர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள பயந்தார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். அவர்கள் எல்லோருமே இறக்கவில்லையே. எனவே விவேக் இறப்புக்கு தடுப்பூசிதான் காரணம் என்று சொல்ல முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.