Sunday, Jul 13, 2025

எனக்கு முன்பே திருமணம் ஆகி விட்டது; மறைக்க காரணம் இதுதான் - போட்டுடைத்த டாப்ஸி

Taapsee Pannu Marriage Tamil Actress
By Karthikraja 7 months ago
Report

எனக்கு கடந்த ஆண்டே திருமணம் ஆகி விட்டதாக டாப்ஸி தெரிவித்துள்ளார்.

டாப்ஸி

ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதன் பிறகு வந்தான் வென்றான், ஆடுகளம், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

actress taapsee

மேலும், பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள டாப்ஸி தற்போது ஹிந்தி சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

திருமணம்

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த ஆண்டே தனக்கு திருமணம் முடிந்து விட்டதாக டாப்ஸி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எனக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே திருமணம் முடிந்து விட்டது. இன்று இதை நான் வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது. எனது தனிப்பட்ட வாழ்க்கையை அந்தரங்கமாக வைத்திருக்க விரும்புகிறேன். 

taapsee marriage

காரணம் எனது சகாக்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் வெளிப்படையாக இருப்பதை பார்த்திருக்கிறேன். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்களின் தொழிலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பாதிக்கும். எனவே, இரண்டிற்கும் இடையே ஒரு கோட்டை வரைய முடிவு செய்தேன். 2013ல் இருந்து எனது பார்ட்னரை எனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

டாப்ஸி கடந்த 24 மார்ச் 2024 அன்று பேட்மிண்டன் வீரர் மத்தியோஸ் போயேவை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.