குளிர்காலத்தில் அடிக்கடி காய்ச்சல் வருகிறதா? அப்போ இந்த வைட்டமின் அவசியம் -நோட் பண்ணுங்க!
குளிர்காலத்தில் தேவைப்படும் வைட்டமின் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குளிர்காலம்
குளிர்காலம் தொடங்கியவுடன், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். இதனால் காய்ச்சல் மற்றும் சளி போன்ற தொற்று நோய் போன்றவை ஏற்படும். இதற்கு சில வைட்டமின்கள் இல்லாததே காரணம். உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களும் சரிவிகித அளவில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குளிர் காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும் போது உடலில் வைட்டமின் டி குறைப்பாடு ஏற்படும். அதற்கு ஆரஞ்சு பழச்சாறு . சீஸ் மற்றும் தயிர் ஆகியவற்றிலும் வைட்டமின் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி , கொலாஜன் உற்பத்தி மற்றும் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க வைட்டமின் சி, தேவைப்படுகிறது.
வைட்டமின்
இலை கீரைக்கள் ,சிட்ரஸ் பழங்கள், பெர்ரி, மிளகுத்தூள் போன்றவை அதிகம் சாப்பிடுவது வைட்டமின் சி குறைப்பாட்டை குறைக்க உதவும். இரத்த சிவப்பணு உருவாக்கம், ஆற்றல் உற்பத்தி மற்றும் நரம்பு செயல்பாடு ஆகியவற்றிற்கு வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இறைச்சி , மீன் , முட்டை மற்றும் பால் பொருட்களில் வைட்டமின் பி12 உள்ளது.
வறண்ட குளிர்கால சருமத்தை எதிர்த்துப் போராட வைட்டமின் ஈ அவசியம். கொட்டைகள் , விதைகள் மற்றும் இலை கீரைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. சூரிய ஒளியை குறைப்பது வைட்டமின் ஏ உற்பத்தியைக் குறைக்கும். இனிப்பு உருளைக்கிழங்கு , கேரட், இலை கீரைகள் மற்றும் மீன் ஆகியவற்றில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.