ரொம்ப யோசிக்கிறீங்களா ? ஓவர் திங்கிங் ஏற்படுத்தும் பிரச்சனைகள் இதுதான்- உஷார்!

Humanite Relationship
By Vidhya Senthil Nov 12, 2024 10:13 AM GMT
Report

எப்போதுமே ஏதாவது யோசித்துக் கொண்டே இருந்தால் சின்ன சின்ன விஷயங்கள் கூட பிரச்சினையாகத் தான் தெரியும்.

ஓவர் திங்கிங்

நாம் அன்றாட வாழ்க்கையில் ஏதாவது ஒரு செயலையோ அல்லது ஒரு நபரைப் பற்றிப் யோசிப்பது அவசியம். அது நல்லதும் கூட, ஆனால் எப்போதுமே எதைப்பற்றியாவது யோசித்துக் கொண்டே இருப்பது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

overthining

அதிகப்படியாகச் சிந்திப்பது தன்னம்பிக்கையைக் குறைக்கும் சின்ன சின்ன விஷயத்தைக் கூட முடிவெடுக்க முடியாமல் தடுமாற வைக்கும் மனநிலையை உண்டாக்கும். மனம் எப்பொழுதும் நிம்மதியாகவே இருக்கவே இருக்காது. இதனால் சுற்றி உள்ளவர்களைப் பாதிப்படையச் செய்யும்.

அதிகமாக யோசித்துக் கொண்டே இருப்பதை எப்படி நிறுத்துவது என்பதற்கான உளவியல் டிப்ஸ் இந்த பதிவில் பார்க்கலாம்.  தியானம் என்பது பெரிய விஷயம் கிடையாது அமைதியான இடத்தில் இயற்கை சூழலில் கடற்கரையில் அமைந்திருந்தாலே போதுமானது.

வயது அதிகரிக்க அதிகரிக்க விந்தணுவில்.. திருமணமான ஆண்களே உஷார்!

வயது அதிகரிக்க அதிகரிக்க விந்தணுவில்.. திருமணமான ஆண்களே உஷார்!

கண்களை மூடி உங்களைச் சுற்றி இருக்கும் அமைதியை உணர்ந்தாலே அதிகமான சிந்திப்பைக் குறைக்கச் செய்யும். மேலும் மன அமைதி பெற நடைப்பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது இது உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களை சுரக்கச் செய்து உங்களை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணரச் செய்யும்.

பிரச்சனைகள்

நம்மில் பலரும் மனிதர்கள் பல நேரங்களில் மனதில் இருக்கும் குழப்பம் வருத்தம் கடுமையான சூழல் பற்றிய சிந்தனைகள் போன்றவை தான் ஓவர் திங்கிங் செய்ய வைக்கும். அத்தகைய சூழலில் உதவி கேட்டு மனதில் இருப்பதை வெளிப்படுத்தினாலே மன அமைதி கிடைக்கும். அதிக நேரம் யோசிப்பதால் மன உளைச்சல் ஏற்படும்.

how to- stop overthining

இதிலிருந்து தப்பிக்க குடும்பம் நண்பர்கள் உடன் பணியாற்றுபவர்கள் என்று நீங்கள் விரும்பும் நபர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுங்கள் . குறிப்பாக அதிகப்படியாகச் சிந்திப்பதை நிறுத்தி நீங்கள் கடந்த காலத்தில் வாழ்வதை நிறுத்த வேண்டும் .

அதன் தாக்கம் இருந்தாலும் கடந்த காலத்திலிருந்ததை எதையும் மாற்ற முடியாது என்பதை முதலில் உணர வேண்டும். இதனை அடுத்து வரும் காலங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அட்டவணைப்படுத்தி அதற்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும்