தோல் பளபளப்பு; டிரெண்டாகும் வைட்டமின் ஈ மாத்திரைகள் - எப்படி பயன்படுத்த வேண்டும்?
வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களைப் பயன்படுத்தும் முறை குறித்து பார்க்கலாம்.
வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் தோல் பாராமரிப்புக்கு உதவுவதாக வைரலாகி வருகிறது. இதனை எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்பது தெரியுமா?
வைட்டமின் ஈ காப்ஸ்யூலைத் திறந்து, தோலில் சிறிது எண்ணெயை மசாஜ் செய்யவும். இது சருமத்தின் இயற்கையான பளபளப்பு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
இரவில் இதைப் பயன்படுத்துவது நல்லது. இது சருமத்தை பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. ஆனால் இதனை அதிகமாகப் பயன்படுத்துவதால் தோல் வறட்சி, சிவத்தல் அல்லது அரிப்பு ஏற்படலாம், எனவே மிதமாக பயன்படுத்துவது நல்லது.
பயன்படுத்தும் முறை
தோல் வறண்டு போகும் வாய்ப்பு இருப்பதால் மாய்ஸ்சரைசர் மற்றும் ஏராளமான தண்ணீரைப் பயன்படுத்துவது அவசியம். மேலும் இது தோல் சுருக்கங்களை குறைக்கிறது.
இருப்பினும் பயன்படுத்துவதற்கு முன்பு தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. எந்த பொருளை பயன்படுத்துவதற்கு முன்பும் பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.