கிளாமர் ரோல்.. காதலால் பிரச்சனை.. நயன்தாரா வெறியில் இருந்தாங்க - பிரபல இயக்குநர்!

Ajith Kumar Nayanthara Vishnuvardhan
By Swetha Dec 06, 2024 04:30 PM GMT
Report

நயன்தாரா பில்லா திரைப்படத்தில் நடித்த கிளாமர் ரோல் குறித்து இயக்குநர் பேசியுள்ளார்.

பிரபல இயக்குநர்

அஜித் நயன்தாரா நடிப்பில் இயக்குநர் விஷ்னு வரதன் இயக்கத்தில் வெளியான பில்லா படம் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த நிலையில், நயன்தாரா பில்லா திரைப்படத்தில் கமிட்டான கதையை அந்தப்படத்தின் இயக்குநர் பிரபல யூடியூப் சேனலில் பேட்டியளித்துள்ளார்.

கிளாமர் ரோல்.. காதலால் பிரச்சனை.. நயன்தாரா வெறியில் இருந்தாங்க - பிரபல இயக்குநர்! | Vishnu Varadhan Open Up About Nayanthara Glamour

இது குறித்து அவர் பேசியதாவது, "நயன்தாரா அந்த சமயத்தில் சில பிரச்சினைகள் காரணமாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் நாங்கள் பில்லா திரைப்படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்திற்கு, வேறு சில நடிகைகளை பார்த்துக் கொண்டிருந்தோம்.

அவர் மீண்டும் நடிக்க வருகிறார் என்று கேள்விப்பட்டதும், உடனடியாக அவரை சென்று நாங்கள் புக் செய்தோம். அந்த படத்தில் அவர் மிகவும் ஆக்ரோஷமாக நடித்திருப்பார். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் அந்தப்படத்தில் மிகப்பெரிய கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற வெறியில் நடித்தார்.

அவரது சினிமா கெரியரை நீங்கள் எடுத்து பார்த்தீர்கள் என்றால், பல பிரச்சினைகளால் துவண்டு கெரியரை விட்டு விலகி, மீண்டும் பலமுறை கம்பேக் கொடுத்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் இடையே உள்ள ஒரு ஒற்றுமை நாங்கள் இருவருமே பின்வாங்க மாட்டோம்.

நயன்தாரா அபார்ட்மெண்ட்டில் கொள்ளை...2 கோடி மதிப்பு பொருட்களை சுருட்டிய கார் டிரைவர்!

நயன்தாரா அபார்ட்மெண்ட்டில் கொள்ளை...2 கோடி மதிப்பு பொருட்களை சுருட்டிய கார் டிரைவர்!

நயன்தாரா 

எங்களுக்கு பிடித்த விஷயத்தை கடைசி வரை விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களுக்கு எது வேண்டுமோ அதற்காக போராடுவோம்.அவர் அந்த படத்தில் நடித்துபோது எடையை வேறு குறைத்து இருந்தார். அது அந்த கதாபாத்திரத்திற்கு இன்னும் அழகாக மாறி இருந்தது.

கிளாமர் ரோல்.. காதலால் பிரச்சனை.. நயன்தாரா வெறியில் இருந்தாங்க - பிரபல இயக்குநர்! | Vishnu Varadhan Open Up About Nayanthara Glamour

எல்லாவற்றிற்கும் மேலாக அந்த கதாபாத்திரம் அவ்வளவு அழகாக ஒர்க்அவுட் ஆனதற்கு அந்த கதாபாத்திரத்தின் கேரக்டரும் நயனின் ரியல் லைஃப் கேரக்டரும் ஒன்றாக இருந்ததே காரணம் அதன் காரணமாகவே அந்த கதாபாத்திரம் அவ்வளவு அழகாக ஒர்க் அவுட் ஆனது.

அதன் பின்னர் ஆரம்பம் படத்தில் அவரை நான் நடிக்க வைத்திருந்தேன். அந்த படத்திலும் அவர் நடித்த கதாபாத்திரம் அவ்வளவு ஸ்ட்ராங்கான கதாபாத்திரம். அதற்கும் அவர் மிகவும் பொருத்தமாக இருந்தார். நயன்தாரா எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்.

சமையல் செய்வார். சந்தோஷமாக இருப்பார். அவர் எங்கள் குடும்பத்திற்கு மிக மிக நெருக்கமானவர். என்னுடைய மனைவி அனு, நயன்தாராவின் அனைத்து படங்களுக்கும் காஸ்ட்யூம் டிசைனராக வேலை பார்க்கிறார் என்று தெரிவித்துள்ளார்.