சத்தீஸ்கர் மாநில முதல்வராகும் பழங்குடியினத் தலைவர்.?யார் இந்த விஷ்ணு தியோ சாய்..?

BJP Narendra Modi India Chhattisgarh
By Karthick Dec 10, 2023 06:23 PM GMT
Report

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 54 தொகுதிகளை வென்று ஆட்சி பிடித்துள்ளது.

பழங்குடியின தலைவர்

விஷ்ணு தியோ சாய் - தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய்நடந்து முடிந்த சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் குங்குரி தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணு தியோ சாய், 87,604 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

vishnu-deo-sai-is-selected-as-chattisgarh-new-cm

59 வயதாகும் இவர், பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான RSS அமைப்பால் மிகவும் விரும்பப்படும் நபராகவும், அம்மாநிலத்தில் பெரும் செல்வாக்குள்ள பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான ராமன் சிங்கிற்கும் மிகவும் நெருக்கமானவராக இருந்து வருகின்றார்.

அப்போ 98% பணிகள் - இப்போ 42% பணிகள் தானா..? அமைச்சரிடம் அண்ணாமலை கேள்வி ..?

அப்போ 98% பணிகள் - இப்போ 42% பணிகள் தானா..? அமைச்சரிடம் அண்ணாமலை கேள்வி ..?

முன்னதாக, நரேந்திர மோடியின் முதல் மத்திய அமைச்சரவையில் எஃகு துறை இணை அமைச்சாராகவும், 16 வது மக்களவையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் தொகுதி MP'யாகவும் இருந்துள்ளார் விஷ்ணு தியோ சாய்.

 vishnu-deo-sai-is-selected-as-chattisgarh-new-cm

அதே போல, கடந்த 2020 முதல் 2023-ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராகவும் இருந்துள்ளார் விஷ்ணு தியோ சாய். சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் தொகை அதிகம் இருக்கும் காரணத்தாலும், பழங்குடியினத்தைத் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்திற்கு இணங்கியும் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

vishnu-deo-sai-is-selected-as-chattisgarh-new-cm

இது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட விஷ்ணு தியோ சாய், தன்மீது நம்பிக்கை வைத்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். பிரதமர் மோடியின் வாக்குறுதி படி, மக்களுக்கு 18 லட்சம் வீடுகள் வழங்குவதுதான் முதல் வேலை என்றும் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் தனது முழு ஈடுபாட்டையும் அளிப்பேன் என தெரிவித்தார்.