அப்போ 98% பணிகள் - இப்போ 42% பணிகள் தானா..? அமைச்சரிடம் அண்ணாமலை கேள்வி ..?
பெரும் துயரையும் பொறுத்துக்கொள்ளும் சென்னை மக்கள் முதல் முறை ரோட்டிற்கு வந்து கேள்வி கேட்க துவங்கியுள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உண்மையை சொல்லவேண்டும்
சென்னை துரைப்பாக்கத்தில், கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மாநகரின் மையப்பகுதியை தவிர்த்த வெளிப்புற பகுதிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, அரசும் - அரசு அதிகாரிகளும் தவறான செய்திகளை தெரிவிக்காமல் மக்களிடம் உண்மையை பேசவேண்டும் எனக்கூறினார்.
பொறுமையாக இருக்கும் மக்கள் முதல் முறையாக ரோட்டிற்கு வந்து கேள்வி கேட்கிறார்கள் என்ற அண்ணாமலை, அரசும் - அதிகாரிகளும் உதவிக்கு வராத நிலையில் தான் மக்கள் ரோட்டில் வந்துள்ளனர் என்றார்.
முதல் முறை
4 மாதத்திற்கு முன்னதாக 98% பணிகள் வடிநீர் வாய்க்கால் பணிகள் முடிந்துள்ளதாக கூறிய கே.என்.நேரு, தற்போது 42% பணிகள் தான் நிறைவடைந்துள்ளதாக கூறியதை சுட்டிக்காட்டி விமர்சித்த அண்ணாமலை, ஆனால் மக்கள் படும் துயரை புரிந்து கொள்ளாமல் இன்னும் பொய் சொல்லி தான் வருகிறார்கள் என்றும் அதற்கு அரசின் மோசமான நடவடிக்கை தான் காரணம் என்றார்.
சாமானிய மக்கள் கூட இந்த துயரங்களை பொறுத்துக்கொள்ளாமல், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கேள்வி கேட்கின்றனர் என்றும் அரசும் - அரசு அதிகாரிகளும் - ஆளும் கட்சியினரும் வராத காரணத்தால் தான் பெரும் துயரையும் பொறுத்துக்கொள்ளும் சென்னை மக்கள் முதல் முறை ரோட்டிற்கு வந்து கேள்வி கேட்க்கின்றனர் என்றார்.