புயல் பாதிப்பு..! அரசு நிவாரணம் அறிவிப்பு..!! எந்தந்த பாதிப்புகளுக்கு எவ்வளவு..! முழு விவரம்
மிக்ஜாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக முதல்வருக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புயல் பாதிப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று இயல்வு வாழ்க்கை வேகமாக திரும்பி வரும் நிலையில், புயல் பாதிப்பிற்கு நிவாரண தொகை ஏதேனும் வழங்குமா? என்ற செய்திகள் வெளியாகாதுவங்கின.
இன்று சென்னை தலைமை செயலகத்தில் இது குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
எவ்வளவு நிவாரணம்.?
இந்நிலையில், தற்போது மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் அந்தந்த ஏரியாக்களின் ரேஷன் கடைகளின் மூலமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்த குடிசைகளுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.5000 தற்போது ரூ.8000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 33%-க்கு மேல் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.17,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புகளுக்கு ரூ.37,500 வழங்கப்படும் என்றும் வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், முழுவதுமாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு வழங்கப்படும் ரூ.50,000-ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு நிவாரணம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் முழுவதுமாக சேதமடைந்த இயந்திர படகுகளுக்கு ரூ.7.5 லட்ச நிவாரணமாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் சேதமடைந்த வலைகளுக்கு நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் எட்ன்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மழையால் 33%-க்கும் மேல் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8000 வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் அறிவித்துள்ளார்.