நீதிமன்றத்தில் விஷால் சொன்ன வார்த்தை..கண்டிப்புடன் எச்சரித்த நீதிபதி!!
நடிகர் விஷாலுக்கு சென்னை நீதிமன்ற நீதிபதி கண்டிப்புடன் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
வழக்கு
நடிகர் விஷால் பெற்ற கடன் 21.29 கோடி ரூபாயை லைகா நிறுவனம் திருப்பி கொடுத்துள்ளது. அதற்காக, விஷாலின் படங்கள் வெளியீடு உரிமை தங்கள் நிறுவனத்திடம் இருப்பதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை நடிகர் விஷால் மீறி படங்களை வெளியிட்டுள்ளார் என்ற காரணத்தை முன்வைத்து, லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
பாஸ்
இந்த வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார் விஷால். அப்போது அவர், தனக்கு இப்படியான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது தெரியாது என கூறி, தான் வெற்று பேப்பரில் மட்டுமே கையெழுத்திட்டதாக கூறினார்.
அதற்கு நீதிபதி, "நீங்கள் கையெழுத்திட்டது எதற்காக என்று தெரியாதா? என்று வினவி புத்திசாலித்தனமாக பதிலளிப்பதாக நினைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்கள்.
அதற்கு விஷால் "பாஸ்"(Pass) என கூற, குறுக்கிட நீதிபதி, நீதிமன்றத்தில் இப்படி பாஸ் என்றெல்லாம் சொல்லக்கூடாது, இது சினிமா சூட்டிங் அல்ல என்றும் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஆம் இல்லை என பதிலளிக்கவேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.