CM - கலெக்டருக்கு நான் சொல்றேன் இது கட்டப்பஞ்சாயத்து!! பகிரங்கமாக விஷால் குற்றச்சாட்டு

Vishal Tamil Actors
By Karthick Apr 25, 2024 08:11 AM GMT
Report

 ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் "ரத்னம்". பிரியா பவானி ஷங்கர், யோகிபாபு, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ள இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

vishal-kattapanjayathu-audio-mk-stalin-

ஆனால், தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் படம் வெளியாக தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து விஷால் வெளியிட்டுள்ள ஆடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

உருப்பட்டதா சரித்திரம் இல்ல.. சினிமாவ குத்தகைக்கு எடுத்துருக்கீங்களா - ரெட் ஜெயின்டை விளாசிய விஷால்!

உருப்பட்டதா சரித்திரம் இல்ல.. சினிமாவ குத்தகைக்கு எடுத்துருக்கீங்களா - ரெட் ஜெயின்டை விளாசிய விஷால்!

அவர் பேசியது வருமாறு,

திருச்சி தஞ்சாவூர் ஏரியாக்களில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சிதம்பரம் செக்கரேட்டரி மற்றும் பிரெசிடெண்ட் மீனாட்சி அவர்களுக்கு இதனை பதிவு செய்கிறேன். உங்க சங்கத்தை சேர்ந்த ஒருவர் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் நான் காசு தர வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளார்.

vishal-kattapanjayathu-audio-mk-stalin-

உங்கள் சங்கத்தின் உறுப்பினர் கூட இல்லாத அவரின் கடிதத்தை வைத்து கொண்டு திரையரங்கு போடவிடாமல் செய்கிறீர்கள். எனக்கும் அந்நபருக்கும் சம்மந்தமே இல்லை. ஒருவேளை நான் பணம் கொடுக்கவேண்டும் என்றால் நான் கையெழுத்து போட்டிருக்கேனா..? ஒரு பொதுவான ஆதாரம் இல்லாமல் இப்படி செய்வது என்னை சுத்தலில் விடுறீங்க. நீங்க அவுங்க கிட்ட proof வாங்கணும்.

vishal-kattapanjayathu-audio-mk-stalin-

எதாவது ஆதாரணம் இருந்த காட்டுங்க. சிதம்பர போன் எடுக்கமாட்டுறாரு. அந்த ஏரியாவில் வெளியிட என் நண்பரான சீனு சார் இந்த படத்தை இப்போ வாங்கிருக்காரு. நட்பு ரீதியில் பண்ணிகொடுங்க என கேட்டுக்கொண்டதால, இப்படி செய்வது இது கட்டப்பஞ்சாயத்து. இது உங்களுக்கு மட்டுமில்லை CM, திருச்சி collector, திருச்சி எஸ்.பி எல்லோருக்கும் இதையே சொல்கிறேன்.

vishal-kattapanjayathu-audio-mk-stalin-

இது கட்டப்பஞ்சாயத்து. நான் இத கோவத்துல சொல்லல. விஷாலுக்கே இந்த கதி'னா, யாரோ தெரியாத ஒரு தயாரிப்பாளருக்கு என்ன நிலைமை..? இத சொல்வது என்னோட கடமை. நீங்க அலட்சியம் பண்ணலாம்..ஆனா நான் அப்படி இருக்கமாட்டேன். நீங்க கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் போது, நானும் அதுக்கான நடவடிக்கை எடுக்க என்ன விட்டுராதீங்க. இத என்னால பொறுத்துக்க முடில. 26'ல ரிலீஸ் ஆகுற படத்துக்கு 24'ஆம் தேதி எதுக்கு வரீங்க. நான் வளர்ந்து வர, கஷ்டப்படுற கலைஞர், யாரோட உழைப்பு'லயும் விளையாடாதீங்க. இத நான் விட்டுறமாட்டேன்.