‘விஷால் ஏன் திருமணம் தள்ளிபோடுகிறார்ன்னு தெரியுமா? இது தான் காரணம்’ - உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!

Udhayanidhi Stalin Vishal
By Nandhini 4 மாதங்கள் முன்

'அயோக்யா' திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'லத்தி'. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். 'ராணா புரொடக்சன்ஸ்' சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

விழாவில் நடிகர் விஷால் பேச்சு

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசுகையில்,

நடிகர் சங்க கட்டடத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரும், தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரும் இடம்பெற வேண்டும் என்பது என் ஆசை, அந்த கனவு விரைவில் நடக்க போகிறது.

லத்தி படத்தில் தனது ரத்தம், வியர்வை சிந்தி உழைத்துள்ளேன். அந்த ஆக்‌ஷன் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்றார்.

உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நடிகர் சங்கம் கட்டடத்தை விரைவில் கட்ட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதை சாக்காக வைத்து தான் விஷால் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சிரித்தபடி பேசினார்.

இவரின் பேச்சைக் கேட்டு விஷால் மட்டுமல்ல, அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். 

vishal-udhayanidhi-stalin