ரொம்ப மோசமான வருஷம் அது; காதலிச்சு ஏமாந்தேன்.. பைத்தியமே புடிச்சிடுச்சி - புலம்பிய விஷால்!
நடிகர் விஷால் தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.
விஷால்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் கடைசியாக வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து விஷால் தன் நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து "லத்தி" என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்திருந்தார்.

அடுத்தடுத்த தோல்வி படங்களால் துவண்டு போன விஷாலுக்கு இந்தப்படமும் கை கொடுக்கவில்லை. 23 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெறும் 3.40 கோடியை மட்டுமே வசூலித்து பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் விஷால் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
திருமணம்?
அதில், 2019ம் வருடம் வாழ்க்கையில் மிகவும் மோசமான வருஷம், அனிஷாவை நான் காதலித்தேன் அதன் பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அவர் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார். திருமணம் நின்றதால், எனக்கு நானே பல முறை பேசிக்கொள்வேன்.

அதனால் என்னை பலர் பைத்தியம் என்று நினைத்தனர். எனக்கான நேரம் வரும். எந்த காரியத்தையும் தைரியமாக துணிச்சலுடன் போராடி முடிப்பவன் நான். என் திருமணம் நின்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை எனக்கான நேரம் வரும் அதுவரை காத்திருப்பேன்.
நடிகர் சங்க கட்டிட வேலை முடிந்தவுடன் என் திருமணம் குறித்து நிச்சயம் உங்களுக்கு சொல்லுவேன் எனக் கூறியுள்ளார்.