இப்படிதான் கல்யாணம் பண்ணிப்பேன் - விஷால் பளீச் தகவல்!
நடிகர் விஷால் தான் காதல் திருமணம்தான் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
விஷால்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் கடைசியாக வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து விஷால் தன் நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து "லத்தி" என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை மாதவரத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தார். அதில், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என இறைவனை வழிபட்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
காதல் திருமணம்
இதில், மணமக்களுக்கு 51 வகையான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியை விஷாலின் பெற்றோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால்,
நடிகர் சங்க கட்டிடம் கூடிய விரைவில் கட்டி முடிக்கப்படும், அதற்கு பிறகு திருமணம் நடக்கும் எனவும், காதல் திருமணம் தான் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.