நடிகர் சங்க கட்டடம்'லா இல்ல..கல்யாணத்துல பிரச்சனையே இது தான்...ஓப்பனாக சொன்ன விஷால்!!

Vishal
By Karthick Oct 16, 2023 05:49 AM GMT
Report

அண்மையில் வெளியான மார்க் ஆண்டனி படம் மாபெரும் வெற்றியை பெற்று கொடுத்து மீண்டும் நடிகர் விஷாலுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது என்றே கூறலாம்.

விஷால்

அறிமுகமான சில படங்களிலேயே தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகராக மாறினார் விஷால். இரும்பு திரை படத்திற்கு பிறகு ஒரு வெற்றிக்காக காத்திருந்த அவருக்கு மார்க் ஆண்டனி மிக பெரிய திருப்தியை அளித்துள்ளது.

vishal-says-why-he-hasnt-married-yet

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஷால். நடிப்பதை காட்டிலும், அவர் நடிகர் தயாரிப்பாளர் சங்க பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

என் பொண்ணு தம் அடிச்சா உனக்கென்ன விசித்ரா!! வரிந்து கட்டிக்கொண்டு வந்த வனிதா!!

என் பொண்ணு தம் அடிச்சா உனக்கென்ன விசித்ரா!! வரிந்து கட்டிக்கொண்டு வந்த வனிதா!!

காரணமே அது தான்

நடிகர் சங்க கட்டிடம் பணிகள் முடிந்த பிறகே தான் திருமணம் செய்து கொள்வேன் என நீண்ட காலமாக தெரிவித்து வரும் விஷால், தற்போது தனது திருமண ஏன் தள்ளிபோகிறது என்பதை வெளிப்படையாக யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

vishal-says-why-he-hasnt-married-yet

அதில், திருமணம் என்பது சாதாரணமான விஷயம் இல்லை என்ற விஷால், அதற்கு புரிதல், பக்குவம் வேண்டும் என்றும் திடீரென ஒரு முடிவு எடுத்துவிட்டு பின் என்ன இப்படி ஆகிவிட்டதே என யோசிக்கக்கூடாது என்று கூறினார். ஏனெனில் திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதை சுட்டிக்காட்டிய விஷால் தனக்கும் நிறைய பொறுப்புகள் உள்ளது என்பதால் அவ்விஷயம் எல்லாம் முடிந்து, தன் வாழ்க்கையிலும் திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால், நிச்சயமாக நடக்கும் என தெரிவித்துள்ளார்.